India
நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட MP-க்கள் விடிய விடிய போராட்டம்! பாஜகவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி மொத்தம் 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகிய 4 பேரும் அடங்குவர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைவரும் சஸ்பெண்டு உத்தரவை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் காந்தியடிகள் சிலை முன்பு தரையில் அமர்ந்து நேற்று பகலில் இருந்து 50 மணி நேர காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட எம்பிக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் இணைய திட்டமிட்டுள்ளனர் என தகவ்ல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!