India
”பாங்கு, கஞ்சாவை அரசே விற்க வேண்டும்”.. ஐடியா கொடுப்பதாக நினைத்து சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க MLA!
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் பா.ஜ.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இக்கூட்டத்தில் பேசிய மஸ்தூர் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி, மதுபானங்களை ஒழித்து விட்டு கஞ்சா விநியோகத்தை ஊக்குவிக்க வேண்டும் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுகிறது. பொதுமக்கள் மது குடிப்பதே இதற்குக் காரணம்.
மது குடிப்பதால்தான் இப்படியான குற்றங்களைச் செய்ய மனிதர்களைத் தூண்டுகிறது. ஆனால் கஞ்சா, பாங்கு பயன்படுத்துபவர்களுக்கு இத்தகைய எண்ணம் ஏற்படுவதில்லை.
எனவே மதுபானங்களை ஒழித்துவிட்டு, கஞ்சா, பாங்குவை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். கஞ்சாவை அரசே விற்பனை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசுக்கு பா.ஜ.க எம்.எல்.ஏ கோரிக்கை வைக்கவேண்டும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!