India
சாக்லேட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் : சிக்கிய தாளாளரின் மகன் - அதிர்ச்சி சம்பவம் !
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தாளாளர் யாசிர், பள்ளியின் சில முக்கிய வேலைகளை கவனித்து வந்துள்ளார். மேலும் அந்த பள்ளியில் படிக்கும் சிறுமிகளிடம் நன்றாக பேசி, அடிக்கடி சாக்லேட், பிஸ்கட், கேக் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இப்படியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு, சாக்லேட் வாங்கி கொடுத்து மாடியில் உள்ள ஒரு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். தாளாளரின் மகன் என்ற நம்பிக்கையில் அந்த மாணவியும் சென்றுள்ளார். ஆனால், அங்கே அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
இதையடுத்து மாணவி வீட்டிற்கு வந்ததும் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கதறி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார். மாணவி கூறியதை கேட்டதும் துடித்து போன பெற்றோர்கள், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பள்ளியில் படிக்கும் பல சிறுமிகளிடம் இதுபோன்று பாலியல் அத்துமீறலில் தாளாளரின் மகன் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!