India
நின்றிருந்த பேருந்து மீது அதிவேகமாக மோதிய சொகுசு பேருந்து: கோர விபத்தில் 8 பேர் பலி - 3 பேர் கவலைக்கிடம்!
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பூர்வாஞ்சல் விரைவுச் சாலையில் இன்று காலை சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நரேந்திரபூர் மதராஹா என்ற கிராமம் அருகே பயணிகளுடன் நின்று கொண்டிருந்த மற்றொரு சொகுசு பேருந்து மீது, சென்று கொண்டிருந்த பேருந்து மோதியது.
இந்த மோதலில் பேருந்தில் இருந்த பயணிகளில் 8 பேர் பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 16 பேருக்கு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கோர விபத்தை பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர். அதோடு காயம் அடைந்தவர்களை பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் விசாரிக்கையில், இரண்டு பேருந்துகளும் பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் இந்த கோர விபத்து குறித்து காவல் அதிகாரி கூறுகையில், இந்த பேருந்தின் ஓட்டுநர், தனது கட்டுப்பாட்டை இழந்ததால், இந்த விபத்து நேர்ந்ததாகவும், லக்னோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!