India
இந்தியாவில் கண்டறியப்பட்ட பன்றி காய்ச்சல்.. 300 பன்றிகளை கொல்ல மாநில அரசு முடிவு!
கொரோனாவுக்கு பின்னர் உலக நாடுகளை அச்சுறுத்தும் நோயாக குரங்கு அம்மை பாதிப்பு இருந்து வருகிறது. பல நாடுகளில் பரவியுள்ள இந்த நோயை உலக அவசர நிலையாக ஐ.நா அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு சோதனையை தீவிரப்படுத்திய நிலையில், இந்தியாவிலும் குரங்கு அம்மை நோய் பரவியது. வெளிநாடுகளுக்கு செல்லாத டெல்லி வாசி ஒருவருக்கு குரங்கு அம்மை பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் உள்ள பண்ணை ஒன்றில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆபத்தான வைரஸ் நோயாக கருதப்படும் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் வளர்ப்பு பன்றிகளை தாக்கும் ஆபத்தான நோயாக பார்க்கப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி என்ற ஊரில் உள்ள பன்றி வளர்க்கும் பண்ணைகளில் பன்றிகள் சில உயிரிழந்துள்ளன. இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் இறந்த பன்றிகளின் மாதிரிகளை பரிசோதனைக்காக சேகரித்துள்ளனர்.
பின் அவற்றை திருவனந்தபுரம் அரசு ஆய்வகத்திற்கும் கோபாலில் உள்ள உயர் விலங்கு தேசிய நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளனர். சோதனை முடிவுகளின் அடிப்படையில் அங்குள்ள இரண்டு பண்ணைகளில் உள்ள பல பன்றிகளுக்கு ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது
இதன் பின்னர் அந்த பண்ணைகளில் இருந்த சுமார் 360க்கும் மேற்பட்ட பன்றிகளை கொல்ல மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்லப்பட்ட பன்றிகளை மிக ஆழத்தில் புதைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!