India
கட்டுக்கட்டாக சிக்கிய கோடி கணக்கிலான ஊழல் பணம்.. மேற்கு வங்க அமைச்சர் அதிரடி கைது !
மேற்கு வங்க மாநில கல்வியமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. தற்போது தொழில்துறை அமைச்சராக இருக்கிறார்.
அவர் கல்வித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிப்பதற்கு தேர்வு நடத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற நியமனத்தில் ஊழல் நடந்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
இதையடுத்து எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவிக்க, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மேலும் இதில் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால் அமலாக்கத்துறையும் இவ்வழக்குத் தொடர்பாக விசாரணையில் இறங்கியது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று திடீரென்று அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருங்கியவர்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது அவரது உதவியாளரான அர்பிதா முகர்ஜி என்பவர் வீட்டில் இருந்து ரூ.20 கோடி ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது. கட்டுக்கட்டாக எடுக்கப்பட்ட பணம் குறித்து அமைச்சரிடம் விசாரணை நடைபெற்றது.
ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், இன்று காலை தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஒரு ஆளுங்கட்சி அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!