தமிழ்நாடு

சொந்தமகனை கழுத்தை நெரித்து கொலை.. போலிஸூக்கு ஃபோன் செய்து பகீர் காரனம் சொன்ன பெற்றோர்: அதிர்ச்சி சம்பவம்!

மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த பெற்றோர் இருவரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொந்தமகனை கழுத்தை நெரித்து கொலை.. போலிஸூக்கு ஃபோன் செய்து பகீர் காரனம் சொன்ன பெற்றோர்: அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை சொக்கலிங்க நகர் பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 56) - குருவம்மாள் (வயது 54) தம்பதிகள் வீட்டின் அருகே வடைக்கடை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் மாரி செல்வம் தொழில்கல்வி படித்த போது பாதியிலேலே கல்லூரியை நிறுத்தி விட்டார்.

இதனால் வேலை கிடைக்காமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அதோடு குடிப்பழக்கத்திற்கு ஆளான மாரிச்செல்வம் குடிப்பதற்காகவும், சொகுசு வாழ்க்கைக்கும் பணம் கேட்டு தாய் தந்தையிரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அளவுக்கு அதிகமான மது போதையில் வீட்டிற்கு வந்த மாரி செல்வம் பெற்றோர்களிம் கேடும் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பெற்றோர் மாரி செல்வத்தின் கழுத்தில் ஸ்கிப்பிங் கயிறை கொண்டு நெரித்து கொலை செய்துவிட்டு மதுரை எஸ் எஸ் காலனி போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

தொடர்ந்து போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மாரி செல்வத்தின் உடலை கைப்பற்றி போலிஸார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு நாகராஜ், குருவம்மாள் மற்றும் மூத்த மகன் ஆகியோரிடம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

நாகராஜ், குருவம்மாள் இருவரும். தாங்கள் தான் தொந்தரவு தாங்காமல் கொன்றோம் என வாக்குமூலம் கொடுத்தனர். இதனை பெற்றோர்கள் இருவரையும் கைது செய்தனர். மகனை பெற்றோர்களே கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories