India
"தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !
மத்தியில் பா,ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து பா.ஜ.க ஆளாத மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுகிறது. அதிலும் குறிப்பாக தெற்கு மாநிலங்களில் இருந்து அதிக வரியை வசூல் செய்யும் ஒன்றிய அரசு அந்த மாநிலங்களுக்கு குறைவாக தொகையையே திரும்பி கொடுக்கிறது.
ஆனால், அதே நேரம் வடமாநிலங்களுக்கு குறைந்த வரி தொகையை பெற்று அதிக தொகையை திருப்ப கொடுக்கிறது. கூட்டாச்சியின் பெயரில் இதை அனுமதித்தாலும் மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய gst இழப்பீட்டு தொகையை வழங்குவதை கூட பா.ஜ.க அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
அதுவும் பா.ஜ.கவை அனுமதிக்காத தமிழ்நாட்டை பா.ஜ.க அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. ரயில்வே துறையில் இருந்து நிதி ஒதுக்குவது வரை அனைத்திலும் இந்த பாகுபாடு தொடர்ந்து வருகிறது. இது போன்ற நிகழ்வு தற்போது தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் பகிரங்கமாக வெளிவந்துள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா கேலோ இந்தியா (KISCE) திட்டத்தின் கீழ் கடந்த நிதி ஆண்டில் (2021-2022) தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்துள்ள ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு (2021-2022) தமிழ்நாட்டிற்கு நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி அதிரவைத்துள்ளார்.
இதேபோல, 2019 முதல் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என எம். எம். அப்துல்லா கேள்வியெழுப்பிய நிலையில், தமிழ்நாட்டிற்கு 2019 முதல் எந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என ஒன்றிய இணையமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்துள்ளார். இது போல பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்து வருவது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
நேபாள வெள்ளம்.. சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?