இந்தியா

மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்.. உடந்தையாக இருந்த மாமியார்.. உ.பி.யில் அதிர்ச்சி!

உத்தரபிரதேச மாநிலத்தில் மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கணவர் மற்றும் அவரது தாயாரை போலிஸார் தேடி வருகின்றனர்.

மனைவியை மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த கணவர்.. உடந்தையாக இருந்த மாமியார்.. உ.பி.யில் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள அர்செனா கிராமத்தில் வசிப்பவர் குசுமாதேவி. இவரது கணவர் ஷியாம்பிஹாரி. கடந்த 14ம் தேதி அன்று குசுமாதேவியை அவரது கணவர் ஷியாம்பிஹாரி மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இந்த சம்பவம் உறுதியான நிலையில், ஷியாம்பிஹாரி மீதும், அவரது தாயார் பர்பாதேவி ஆகியோர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 323, 504, 354 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிக்கந்த்ரா காவல் நிலைய பொறுப்பாளர் ஆனந்த்குமார் ஷாஹி கூறும்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஷியாம்பிஹாரி , அவரது தாயார் பர்பாதேவி ஆகியோர் தலைமறைவான இருக்கின்றனர் எனவும் அவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே போலிஸில் புகார் அளிக்கக் கூடாது என்று குசுமா தேவி மிரட்டப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது வெளிவராத நிலையில், இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories