India
மெட்ரோவில் நஸ்ரியா பாட்டுக்கு குத்தாட்டம்.. வைரலான வீடியோவால் வசமாக போலிஸிடம் சிக்கிய இளம்பெண் !
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ இரயிலில் இளம்பெண் ஒருவர் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் நானி, நஸ்ரியா நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் தான் 'ஆண்டே சுந்தரநிகி" (Ante Sundaraniki). இந்த படத்தில் இடம்பெற்ற 'தந்தானந்தா' என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் மெட்ரோ இரயிலினுள் நடனம் ஆடியுள்ளார். மேலும் இரயிலுக்கு வெளியில் நின்று நடிகர் கிச்சா நடிப்பில் வெளியான இந்தி படமான 'விக்ரந்த் ரோனா' திரைப்படத்தில் இடம்பெற்ற "ரா ரா ராக்கம்மா" பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இணையவாசி ஒருவர், இது போன்று மெட்ரோ இரயில்களில் தொடங்கியுள்ளது என்றும், அதிகாரிகள் ஆக்ஷனுக்கு தயாராகுங்கள் என்றும் பதிவிட்டார். இதையடுத்து இது குறித்து முறையாக விசாரணை நடத்தி, அந்த இளம்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐதராபாத் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்தது. மேலும் காவல்துறையிலும் அந்த பெண் மீது புகாரளிக்கப்பட்டது.
இந்த இளம்பெண் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், சிலர் இவருக்கு ஆதரவாகவும், சிலர் இவருக்கு எதிராகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த இளம்பெண் மீது காவல்துறையினர் பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவிப்பு உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற செயல்களை பாராட்ட கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!