India
கிரிப்டோ கரன்சிக்கு தடை?.. மக்களவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?
இந்தியாவில், கடந்த சில ஆண்டுகளாகவே கிரிப்டோ கரன்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தபோதும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சியின் செயல்பாட்டிற்கு ஒன்றிய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியும் இன்னும் முழுமையாக ஆதரிக்கவில்லை.
கடந்த ஆண்டு கூட கிரிப்டோ கரன்சி தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதுள்ளது. மேலும் கிரிப்போட கரன்சி இந்திய நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என ரிசர்வ் வங்கியும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய மக்களவை கூட்டத் தொடரில் தொல். திருமாவளவன் எம்.பி ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்துப் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கிரிப்போட கரன்சி தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் கிரிப்டோ கரன்சி தொடர்பாக புதிய சட்டம் கொண்டு வருவது குறித்தும் நாடாளுமன்ற குழுக்களின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது. ஆனால் தொழில் நுட்ப காரணமாக இதை அமல்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கிரிப்டோ கரன்சிக்கு தடை விதித்தால் அது வலுவாக அமலாகாது. ஏன் என்றால் பல நாடுகளிலிருந்து இணையம் மூலம் கிரிப்டோ கரன்சிகள் விற்கப்படுகின்றன. எனவே உலக நாடுகள் ஒத்துழைப்புடன் கிரிப்டோ கரன்சிக்கு தடை சட்டத்தை இயற்ற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!