இந்தியா

“தெலுங்கானா வெள்ளத்துக்கு வெளிநாடுகளின் சதிதான் காரணம்” - என்ன சொல்கிறார் சந்திரசேகர ராவ்?

தெலுங்கானாவில் ஏற்பட்டுள்ள மேகவெடிப்புக்கு வெளிநாடுகளின் சதி காரணமாக இருக்கலாம் என அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

“தெலுங்கானா வெள்ளத்துக்கு வெளிநாடுகளின் சதிதான் காரணம்” - என்ன சொல்கிறார் சந்திரசேகர ராவ்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தெலுங்கானாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றின் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்குள்ள பத்ராசலம் என்ற ஊர் தற்போது வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. 53 அடி வரை மூழ்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 70 அடி வரை அந்த பகுதி நீரால் மூழ்கியுள்ளது.

“தெலுங்கானா வெள்ளத்துக்கு வெளிநாடுகளின் சதிதான் காரணம்” - என்ன சொல்கிறார் சந்திரசேகர ராவ்?

இந்த அதிகனமழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம் மேகவெடிப்பு காரணமாக இந்த கனமழை பெய்துள்ளது என கூறியுள்ளது.

இந்த நிலையில் இந்த பகுதிகளை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று நேரில் பார்வையிட்டார்.அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மேகவெடிப்பு என்பது இங்கு புதுநிகழ்வாக இருக்கிறது. இது பிற நாடுகளின் சதியாகவும் இது இருக்கலாம்.

“தெலுங்கானா வெள்ளத்துக்கு வெளிநாடுகளின் சதிதான் காரணம்” - என்ன சொல்கிறார் சந்திரசேகர ராவ்?

இது தொடர்பாக எங்களுக்கு செய்தி வந்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதற்கு முன்னர் காஷ்மீர் பகுதியில் இதுபோல மேகவெடிப்பு உருவானது, அதற்கு பின் உத்திரகாண்ட்டில் நடந்தது, தற்போது தெலுங்கானாவில் நடக்கிறது” எனக் கூறினார். அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories