India

சினிமாவில் என்ட்ரீ கொடுத்த வெள்ளை சேவல்; மாணவனின் பேச்சை அப்படியே கேக்கும் சுவாரஸ்யம்: குவியும் பாராட்டு!

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் நவநீதன். தற்போது பள்ளியில் படித்து வரும் இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'ஒயிட் லக்கான்' என்ற வகையுடைய சிறிய சேவல் ஒன்றை வாங்கியுள்ளார்.

வாங்கி சில நாட்களிலேயே மற்ற சேவல்களை போல் இல்லாமல் அதன் நடவடிக்கைள் மாறியிருந்தன. எனவே அந்த சேவலை வித்தியாசமான முறையில் வளர்க்க எண்ணினார் நவநீதன்.

மேலும் அந்த கோழிக்கு சிவராமன் என பெயரிட்டு அழைத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாது முறையான பயிற்சியை வழங்கியுள்ளார். அதன்படி அந்த சேவலின் முதலாளி நவநீதன் சொல்வதை எல்லாம் கேட்டு, அதன்படி செய்து வருகிறது இந்த சிவராமன் சேவல்.

நவநீதன் கூவ சொன்னனால் 'கொக்கரக்கோ' என்று கூவுவது, தாவ சொன்னால் தாவி அவரின் கைகளில் நிற்பது, சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணிப்பது போன்ற பல ஸ்வாரசிய விசயங்களை செய்து வருகிறது அந்த சேவல்.

இதனை கண்ட ஒரு மலையாள படக்குழுவினர், இந்த சேவலை தங்களது படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டியுள்ளது. அதன்படி ஒரு படத்திலும் நடிக்க வைத்துள்ளது. இது குறித்து மாணவர் நவநீதன் கூறுகையில், "என் சேவல் நான் சொல்வதை எல்லாம் கேட்கும். இதனை கண்ட ஒரு இயக்குநர் அவர் படத்தில் இதை நடிக்க வைத்துள்ளார். மேலும் தற்போது என் சேவலுக்கு குறும்படத்தில் நடிக்க வாய்ப்பும் குவிந்து வருகிறது" என்றார்.

வித்தியாசமாக செயல்படும் சேவலின் நடவடிக்கைகளை கண்ட நவநீதனின் நண்பர், இதனை விடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read: தந்தைக்கு தெரியாமல் படகை எடுத்துச் சென்று பார்ட்டி.. மதுபோதையில் கடலில் மூழ்கி இளைஞர் பலி: பகீர் சம்பவம்!