India
மோடி ஆட்சியில் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி.. இந்தியாவில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீட்டாளர்கள் !
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக, தொடர்ந்து அடிவாங்கும் பங்குச் சந்தைகள், ஜி.டி.பி வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று காலை, ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் 22 காசுகளாக இருந்தது. இது இன்று 80 ரூபாய் 04 காசுகளாக வீழ்ச்சி கண்டது. ரூபாய் மதிப்பு இந்த அளவிற்கு மோசமாக வீழ்ச்சியைச் சந்தித்து இருந்தது. மேலும் சீன நாட்டின் யுவான் மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இதனால் இந்திய பங்கு சந்தையும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்
அதேவேளையில் இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!