India
தனியாக இருந்த பெண்ணை கட்டிப்போட்டு, கண்ணில் குச்சியைச் சொருகிவிட்டுச் சென்ற ‘சைக்கோ’.. நடந்தது என்ன?
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் இருக்கும் டக்லா என்ற கிராமத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது கணவர் தற்போது டெல்லியில் வேலை பார்த்து வருவதால், தனது 8 வயது குழந்தையுடன் தனியே வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம்போல், வீட்டிற்குள் இவரும், இவரது மகளும் உறங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் கதவு யாரோ தட்டிய சத்ததை கேட்ட அந்த பெண் எழுந்து கதவை திறந்துள்ளார். அந்த சமயத்தில் வெளியில் இருந்து அந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு, கயிற்றை கொண்டு அவரை கட்டி போட்டு, அவரது கண்ணில் ஒரு குச்சியை கொண்டு குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் இரத்தம் சொட்ட சொட்ட கதறி அழுதார். இவரது சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பான விசாரணையில் எம்.டி சமீம் என்பவரை கைது செய்து இது பாலியல் வன்கொடுமைக்காக செய்யப்பட்ட குற்றமா என்று விசாரித்து வருகின்றனர்.
மேலும் அந்த பெண்ணை அனுமதித்த மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் கூறுகையில், "கண்ணில் குச்சியை வைத்து குத்தியதால், அந்த பெண்ணுக்கு பார்வை கிடைக்குமா என்பது சந்தேகமே" என்றனர். யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கண்ணில் குச்சியை வைத்து தாக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!