India
விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 45 துப்பாக்கிகள்..முன்பே 25 துப்பாக்கியை கடத்தியதாக பகீர் வாக்குமூலம்!
ஹரியானாவை சேர்ந்த ஜக்ஜித் சிங் - ஜஸ்விந்தர் கவுர் தம்பதியினர் கடந்த ஜூலை 10ஆம் தேதி வியட்நாமில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களுடன் இவர்களது 18 மாத குழந்தையும் வந்துள்ளது.
இவர்கள் டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளிவரும்போது இவர்கள் கொண்டுவந்த பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் கொண்டுவந்த பையில் 45 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதன் பின்னர் இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், பிரான்சில் இருக்கும்போது ஜக்ஜித் சிங்கின் சகோதரர் மஞ்சித் சிங் கொடுத்த இரண்டு பைகளை தாங்கள் வாங்கி வந்ததாகவும், அதில்தான் இந்த துப்பாக்கிகள் இருந்தது என்றும் அந்த தம்பதிகள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானவையா போலியானவையா என சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அவை சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அந்த துப்பாக்கிகள் உண்மையானவை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் அந்த 45 துப்பாக்கிகளின் மதிப்பு மட்டும் சுமார் 22,50,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னதாக இதேபோல் துருக்கி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு 25 கைத்துப்பாக்கிகளை எடுத்து வந்துள்ளதாகவும் அந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.
விமான நிலையத்தில் அதிக பாதுகாப்பு இருக்கும் நிலையில், எப்படி ஒருமுறை துப்பாக்கிகள் கடத்தப்பட்டது என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஜக்ஜித் சிங்கின் சகோதரர் மஞ்சித் சிங் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!