India
பாஜக-வின் போலி பிம்பத்தை அம்பலப்படுத்திய கனமழை.. குஜராத் மாடல் லட்சனம் இதுதானா?: வெளுத்து வாங்கிய மக்கள்!
வரலாற்று காலம் முதலே குஜராத் தொழிற்துறையில் சிறந்து விளங்கியது. சூரத் போன்ற நகரங்கள் முகலாய ஆட்சி காலத்தில் முக்கிய வணிக தளமாக உருவெடுத்தது. சுதந்திரம் அடைந்த பின்னர் அகமதாபாத் போன்ற நகரங்கள் நல்ல தொழில்துறை வளர்ச்சி பெற்றன. ஆனால் குஜராத்தின் இந்த வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டுமே காணப்படுகிறது. அதன் ஊரக பகுதிகள் பல அடிப்படை தேவைகள் கூட இல்லாத இடங்களாகதான் திகழ்கிறது.
அங்கு கடந்த 1990ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. அதில் இருந்து 22 ஆண்டுகள் அங்கு பா.ஜ.க.தான் ஆட்சியில் இருந்து வருகிறது. அதிலும் மோடி 'குஜராத் மாடல்' என்ற பொய்யை அடிப்படையாக வைத்தே ஆட்சிக்கு வந்தார்.
ஆரம்பத்தில் அதை பலர் நம்பினாலும் கொஞ்சம் கொஞ்சமாக குஜராத் மாடலின் போலிதன்மை வெளியே தெரிந்து வருகிறது. இந்த நிலையில் மோடி கற்பித்த குஜராத் மாடலின் உண்மை தன்மை தற்போது பெய்துவரும் பெருமழை காரணமாக முற்றிலும் வெளிவந்துள்ளது.
குஜராத்தில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்துவருகிறது. ஆனால் இந்த பருவமழைக்கே குஜராத் தாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக குஜராத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள பாலங்கள், சாலைகள் அனைத்தும் மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளன.
பல பாலங்கள் உடைந்தும், சாலையின் நடுவே பள்ளங்கள் விழுந்தும் காட்சியளிக்கிறது. அரசு சார்பில் போடப்பட்ட தரைப்பாலங்கள் பல மழை நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன. பல குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ள இணையவாசிகள் இதுதான் மோடி கூறிய குஜராத் மாடலா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலர் சில மணிநேர மழை பாஜகவின் பொய் பிம்பத்தை வெளிக்கொண்டு வந்துவிட்டது என்று கூறி வருகின்றனர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!