India
கடுமையான நோய்த்தொற்று - மாணவர்களை தாக்கிய ’நைரோபி ஃப்ளைஸ்’ பூச்சி.. சிக்கிமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சிக்கிமில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தோல் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவம் அங்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நோய்த்தொற்றுக்கு காரணம் ஒரு வகை பூச்சி தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.
’நைரோபி ஃப்ளைஸ்’ எனப்படும் ஒருவகை பூச்சி தொற்றால் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பூச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் நைரோபி ஈக்கள் மனிதர்களை கடிக்காது, கொட்டாது என்றாலும், தோலில் அமர்ந்தால் தீக்காயங்களைப் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இதனால் ஏற்படும் கொப்பளங்கள் வடுக்கள் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நரம்பு வலி, மூட்டு வலி அல்லது வாந்தியெடுத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது சில நேரம் கண் பார்வையும் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
இந்தி influencers-களுக்காக.. இந்தியில் மாற்றப்படும் தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள்..
-
“பேச தகுதி இருக்கா...? அவ்வளவு ரோஷம் இருந்தால்...” - விஜயை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
“விஜய்க்கு சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லை” : தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
-
Party Fund வாங்கிய த.வெ.க?; நீதிமன்றத்தில் அம்பலப்பட்ட மெகா ஊழல் : ஆர். எஸ்.பாரதி அறிக்கை!
-
முடங்கியுள்ள பொருளாதாரம் ; த.வெ.க அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? - தங்கம் தென்னரசு கேள்வி!