India
5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது திடீரென தீ பிடித்த விமானம்.. பீதியடைந்த பயணிகள்!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் 5000 அடி உயரத்தில் பறக்க தொடங்கிய போது விமானத்தின் ஓட்டுநர் அறை அருகில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. இதை விமான சிப்பந்திகள் பார்த்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி மட்டுமில்லாமல் பீதியும அடைந்தனர்.
மேலும் விமானம் முழுவதும் புகை அதிகமாக வெளியேறி சூழ்ந்ததால் பயணிகளுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
அங்கு தயாராக இருந்து விமான நிலைய அதிகாரிகள், உடனே பயணிகளை விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினார்கள். விமானத்தில் எதானல் புகை ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, "விமானத்தின் கேபின் பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து உடனடியாக விமானம் தரைஇறக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எதனால் புகை வந்தது? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும்" தெரிவித்துள்ளார்.
Also Read
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!
-
“காங்., திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது.. எனவே...” - செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல்!