India
முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்ரே.. மகாராஷ்டிரா அரசியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சராக உத்தவ் தாக்ரே உள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை சிவசேனா கட்சி பா.ஜ.கவுடன் கூட்டணியிலிருந்தது.
பிறகு கூட்டணியை முறித்துக் கொண்டு சிவசேனா கட்சி சட்டப்பேரவை தேர்தலில் களம் கண்டது. இந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சராக உத்தவ் தாக்ரே பதவியேற்றார்.
அதில் இருந்தே சிவசேனா கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி ஆட்சியைக் களைத்துவிட வேண்டும் என தொடர்ச்சியாக பா.ஜக முயன்று வந்தது. இது குறித்துப் பல கூட்டங்களில் முதல்வர் உத்தவ் தாக்ரேவும் வெளிப்படையாக கூறிவந்தார்.
இந்நிலையில், சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என போர்க்கொடி தூககினர். இதனால் சிவசேனா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து 50 எம்.எல்.ஏ-கள் ஏக்நாத் ஷிண்டே உடன் கைது கோர்த்துக் கொண்டு புதிய அரசு அமைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதற்கிடையில் சிவசேனா சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் அடுத்த மகாராஷ்டிரா அரசியலில் என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!
-
சென்னை கடற்கரை பகுதிகளை பாதுகாக்க கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை : அதன் சிறப்புகள் என்ன?
-
பெயர் நீக்கம் மட்டுமே பிரச்சனை அல்ல: VBGRAMG சட்டத்தின் ஆபத்து குறித்து பழனிசாமிக்கு பாடம் எடுத்த முரசொலி
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!