India
பழங்குடியின சிறுமி கல்லால் அடித்து கொடூர கொலை.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுடைய பழங்குடியின சிறுமி, எப்போதும் தனது வீட்டின் அருகில் இருக்கும் மாம்பழம் மற்றும் முந்திரி பண்ணையை பராமரித்து வருவது வழக்கம். அவ்வாறாக கடந்த செவ்வாய்க்கிழமை பண்ணைக்கு சென்ற சிறுமி இரவாகியும் வீடுதிரும்பவில்லை.
இதையடுத்து மறுநாள் மாலை அந்த முந்திரி தோப்பு வழியே சென்ற சில வழிப்போக்கர்கள், அங்கு ஒரு குழியில் சிதைக்கப்பட்ட முகத்துடன் சிறுமியின் சடலம் இருப்பதை பார்த்தனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஒருவர் கூறுகையில், அந்த சிறுமி, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், அந்த சிறுமி தனியே செல்வதை பார்த்தவர்கள், அவரை பின் தொடர்ந்து வழியிலேயே பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் அந்த சிறுமியின் முகத்தை கல்லால் அடித்து சிதைத்து கொலை செய்து, சடலத்தை குழியில் வீசி அதை கற்கள் மற்றும் புல்லால் மூடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?