India
மனைவி தற்கொலை.. 2 மாதம் கழித்து கன்னட இளம் நடிகர் குத்திக் கொலை: ரசிகர்கள் அதிர்ச்சி!
கர்நாடக மாநிலம், மத்தூரைச் சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா. இவர் ’லகோரி’ என்ற கன்னட படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
இவர் பெங்களூருவில் உள்ள ஆர்.ஆர். நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, இவரது வீட்டிற்குள் புகுந்த இரண்டு பேர் சதீஷ் வஜ்ராவை சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் பலத்த காயத்துடன் இருந்த அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சதீஷ் சில மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இதனால் குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது மனைவியும் 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் அந்த பெண்ணின் சகோதரர்கள் சதீஷ் வஜ்ராவை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !