India
“குளியலறையில் மர்மமான முறையில் மரணம்.. பிரபல பேஷன் டிசைனர் கொலையா?” - போலிஸ் தீவிர விசாரணை!
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரித்யுஷா கரிமெல்லா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்ததார். பிரித்யுஷா. இதனிடையே அவரின் வீட்டில் இருந்து துருநாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வீட்டிற்குச் சென்று பார்த்தப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பிரித்யுஷா வீட்டின் குளியலறையில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்துள்ளார். இதனையடுத்து போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!