India
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. ஜார்க்கண்டில் கொடூர சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலம், பென்காபாத் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.
பிறகு அந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டதால் அருகே இருந்த கிராம மக்கள் அவரை மீட்க ஓடிவந்தனர். இதைப்பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து அறிந்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் அங்கு வந்து, தங்களின் பெண் என்றும் பாராமல் அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத கிராம மக்கள் தீயை அணைத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்று மற்றொரு சம்பவமும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
கும்லா மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்துத் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!