India
“இந்தியாவில் தேசியக் கொடிக்கு பதில் RSS காவிக் கொடி பறக்கும்” : பா.ஜ.க தலைவர் மீண்டும் சர்ச்சை பேச்சு!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்தே அகண்ட பாரதமாக இந்தியாவை மாற்றுவோம், தேசிய கொடிக்கு பதில் இந்தியாவில் காவிக் கொடி பறக்கும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையைத் தொடர்ச்சியாக பா.ஜ.க தலைவர்கள் பேசி வன்முறையைத் தூண்டி வருகின்றனர்.
முன்னதாக “பா.ஜ.க-வுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள் என்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள் என்றும் கர்நாடக தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் ஈஸ்வரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தனது அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டார்.
இந்நிலையில், கர்நாடக பா.ஜ.க தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான இருந்த கே.எஸ்.ஈஸ்வரப்பா இந்தியாவில் தேசியக் கொடிக்குப் பதிலாகக் காவிக்கொடி பறக்கும் என பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, “காவிக்கு மரியாதை என்பது நேற்றோ இன்றோ தொடங்கவில்லை, பல்லாயிரம் ஆண்டுகளாக அது மதிக்கப்படுகிறது. காவிக்கொடி என்பது தியாகத்தின் அடையாளம். ஆர்.எஸ்.எஸ் கொடி என்றாவது ஒரு நாள் தேசியக் கொடியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
தியாக உணர்வை வெளிக்கொணர, ஆர்.எஸ்.எஸ் காவிக் கொடியை முன் வைத்து பிரார்த்தனை செய்கிறோம். அரசியலமைப்பின் படி மூவர்ணக்கொடியான தேசியக் கொடிக்கும் தகுதியான மரியாதையை நாங்கள் வழங்குகிறோம்" என தெரிவித்துள்ளார்.
அண்மையில்தான் கர்நாடக அரசுப் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெக்டேவாரின் கருத்துக்கள் பாடப் புத்தகங்களில் சேர்க்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆர்.எஸ்.எஸ் கொடி பறக்கும் என பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!