India
வீடுபுகுந்து கொள்ளை.. சுவரில் ‘I LOVE YOU’ என எழுதிய கொள்ளையர்கள் - உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கோவா மார்கோவ் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிப் செக். இவர் வேலைக்காரணமாக இரண்டு நாள்கள் வெளியூருக்குச் சென்று வீட்டில் நேற்றைய தினம் வீடு திருப்பியுள்ளார்.
அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிப், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் திருடுபோயிள்ளது. இதனையடுத்து, மார்கோவ் நகர் போலிஸாருக்கு ஆசிப் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கொள்ளை சம்பவம் குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது வீட்டில் ஏதாவது தடயம் கிடைக்குமா என்று போலிஸார் தேடிய போது, வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையில், 'I LOVE YOU' என எழுதிவைத்திருப்பதையும் கண்டுப்பிடித்தனர். இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!