India
வயலில் வேலை செய்தபோது தந்தையை வெட்டி கொன்ற மகன்.. கால்நிலையத்தில் மனைவி பரபரப்பு புகார்!
மகாராஷ்டிரா மாநிலம், மோகடா பகுதியைச் சேர்ந்தவர் பாண்டு சாவ்ஜி. இவரது மகன் காசிநாத். இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாண்டு சாவ்ஜி அப்பகுதியில் உள்ள வயலில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் காசிநாத் தனது தந்தையிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காசிநாத் அங்கிருந்த கோடாரியை எடுத்து தந்தை என்றும் பாராமல் பாண்டு சாவ்ஜி மீது கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்தவரை மீட்ட அப்பகுதி மக்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டு சாவ்ஜி ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து கணவனை அடித்தே கொலை செய்த மகன் மீது தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள காசிநாத்தைத் தேடி வருகின்றனர். மேலும்,பாண்டு சாவ்ஜியை அவரது மகனே ஏன் அடித்து கொலை செய்தார் என்பது குறித்தும் அவரது தாயிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையையே மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!