India
வீட்டில் இருந்து வீசிய துர்நாற்றம்.. சடலத்துடன் ஒரே அறையில் தங்கிய மகள் - நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிதா தீட்ஷித் (26). இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து விரைந்து வந்த போலிஸார், அங்கிதா வீட்டின் கதவை தட்டியபோது, யாரும் திறக்காததால் போலிஸார் கதவை உடைக்க முயன்றனர்.
அப்போது வீட்டிகுள் இருந்து பெண் ஒருவர் குரல் எழுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர். அப்போது ஒரு இருட்டு அறையில் அங்கிதா மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.
மேலும் அவரால் சரியாக பேசமுடியாமல் இருந்துள்ள நிலையில், அவர் இருந்த பக்கத்து அறையில் தயாரின் உடல் கிடைந்துள்ளது. சடலமாக கிடந்த அங்கிதாவின் தாய் சுனிதா உயிரிழந்து, 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என போலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலிஸார் அங்கிதாவின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்களின் அறிக்கை வந்தபிறகே உயிரழந்ததற்காக காரணம் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தாயார் சடலம் அருகே 10 நாட்களாக மகள் தங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அதிமுகவின் வாக்குறுதிகளுக்கு வாய் இருந்தால் கதறி அழுதிருக்கும்..” - பட்டியலிட்டு அமைச்சர் ரகுபதி தாக்கு!
-
விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. இறுதியில் திக் திக்.. வெற்றி பெற்றது யார்? - விவரம்!
-
CAMPA Energy : அஜித்திற்கு எதிராக திரும்பிய ரசிகர்கள்… இணையத்தில் வலுக்கும் எதிர்ப்பு... இதுதான் காரணமா?
-
பரமக்குடியில் ரூ.3 கோடி மதிப்பீட்டிலான இமானுவேல் சேகரனார் மணிமண்டபம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மையம்!” : முதலமைச்சரின் 2 அதிரடி அறிவிப்புகள்!