India
பள்ளிகளில் பாலியல் குற்றம்.. உச்ச நீதிமன்றம் அளித்த முக்கிய ஆலோசனை.. நக்கீரன் கோபால் மனு மீது உத்தரவு!
பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதோடு ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக குழுக்களை அமைத்து உத்தரவிடக் கோரி நக்கீரன் ஆசிரியர் கோபால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற போதுகூட பாலியல் குற்றங்கள் நடைபெற்றன. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
நக்கீரன் கோபால் மனு இன்று நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
மேலும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சி.சி.டி.வி கேமிரா அமைக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?