India
"என்ன சுட்டுடாதீங்க" : காவல்நிலையம் வந்து போலிஸாருக்கு ஷாக் கொடுத்த கொள்ளையன்; உ.பியில் நடந்த சுவாரஸ்யம்
உத்தர பிரதேச மாநிலம், பட்டன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்கன். இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளன. இதனால் இவரை போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் வியாபாரி ஒருவரிடம் இருந்து ஃபர்கன் ரூ.5 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஃபர்கனை தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும் ஒருமுறை போலிஸார் அவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்க முயன்றபோதும் அவர் தப்பித்துள்ளார். இதையடுத்து கொள்ளையன் ஃபர்கன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் உயிருக்கு அஞ்சிய கொள்ளையன் ஃபர்கன் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். என்னை சுட்டுவிடாதீர்கள், போலிஸ் மீதான பயத்தால் நானே சரணடைகிறேன் என எழுதப்பட்ட பெயர் பலகையை கழுத்தில் அணிந்து கொண்டு பிஹ்தா நகர காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதையடுத்து போலிஸார் ஃபர்கனை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரம் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!