India
ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென ஒளிபரப்பான ஆபாசப் படம்.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!
அசாம் மாநிலம் டினசுகியா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கலந்துகொண்டுள்ளார். இதில் அரசின் நலத்திட்ட பணிகளையும் அவர் தொடங்கிவைத்துள்ளார். இதையடுத்து இந்திய ஆயில் நிறுவனத்தில் மெத்தனால் கலந்து பெட்ரோல் தயாரிக்கும் புதிய திட்டத்தையும் அமைச்சர் ராமேஸ்வர் டெலி தொடக்கிவைத்தார்.
அப்போது, இந்த திட்டம் குறித்து விளக்கக்கூடிய வைகையில் ப்ரொஜெக்டர் மூலமாக காணொளி ஒன்றி ஒளிபரப்பப்பட்டது. அப்போது திடீரென அந்த வீடியோவில் ஆபாசப் படங்கள் வந்துள்ளது. இதைப்பார்த்து ஒன்றிய அமைச்சர் உட்பட அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே அந்த காணொலி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரொஜெக்டர் ஆபரேட்டடை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஒன்றிய அமைச்சர் ராமேஸ்வர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!