India
”அரசியல் சார்பின்றி பணியாற்றுங்கள்; மீறினால் கடும் நடவடிக்கை பாயும்” - IAS, IPSகளுக்கு சுப்ரீம்கோர்ட் ஆணை
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் அரசியல் சார்பில்லாமல் பணியாற்ற வேண்டும் எனவும், மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
தேர்தலில் போட்டியிட சீட் பெறும் எண்ணத்தில் அதிகாரிகள் செயல்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, பணி ஓய்வுக்குப் பின்னர் குறிப்பிட்ட காலம் வரை தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நீதிபதி இந்திரா பாணர்ஜி தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தலில் போட்டியிட குறிப்பிட்ட தடைகாலத்தை அறிவிப்பது குறித்து நாடாளுமன்றம்தான் சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்றம் உத்தரவிட இயலாது.
அதே நேரத்தில், அதிகாரிகள் ஒருமைப்பாடு, பாரபட்சமற்ற தன்மை, நடுநிலை, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும் என்கிற பணியாளர் விதிமுறைகளை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.
அதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது 1968 ஆம் ஆண்டு பணியாளர் சேவை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!