India

மின்சார வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது ஓலா நிறுவனம்: என்ன காரணம் தெரியுமா?

வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருப்பினும் நம் நாட்டின் வெப்பநிலைக்கு ஏற்ப அந்த மின்சார வாகனங்களின் பேட்டரிகள் முறையாக வடிவமைக்கப்படாததால் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே தீப்பற்றி எரிவது, உடைவது போன்ற அபாயமாக சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே பெட்ரோல், டீசலின் விலை உயர்வால் சோர்ந்து போயிருந்த மக்களின் பார்வை மின்சார வாகன பயன்பாட்டுக்கு திரும்பின. தற்போது அதுவும் இப்படியாக ஏமாற்றமளிக்க செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே மின்சார வாகனங்களின் பேட்டரிகளுக்கு என நிதி ஆயோக் புதிய கொள்கைகளை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் ஓலா நிறுவனம் தனது வாகனங்களை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது.

Also Read: மின்சார வாகனங்கள் தீக்கிரையாவதை தடுக்க புதிய திட்டம்.. நிதி ஆயோக் வெளியிட்ட அந்த அம்சங்கள் என்ன தெரியுமா?

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து 1,441 மின்சார வாகனங்களை திரும்பப் பெறுகிறோம். அதனை எங்களது பொறியாளர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவார்கள்.

அதன் மூலம் பேட்டரி, தெர்மல் போன்ற சிஸ்டம்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.” என ஓலா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஒகிநாவா, ப்யூவ் EV போன்ற நிறுவனங்களும் 3,000, 2,000 முறையே தங்களது மின்சார வாகனங்களை திரும்பப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆசையாய் வாங்கிய ஸ்கூட்டர் இரண்டாக உடைந்த சோகம் : தீ விபத்தை தொடர்ந்து அடுத்த சர்ச்சையில் எலக்ட்ரிக் பைக்!