India
“143 பொருள்கள் மீதான GST வரியை உயர்த்த திட்டம்..?” : மக்களின் மீது மேலும் சுமையை திணிக்கும் மோடி அரசு!
பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை உயர்த்தவும், விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவும் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையுடன் வரி வசூல் குறைந்திருப்பதால் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஜி.எஸ்.டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதனால்அப்பளம், சர்க்கரை, பவர்பேங்க் உள்ளிட்ட 143 பொருட்களின் மீதான வரியை 18% லிருந்து 28% உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஒழுங்காக அணுகி அதற்கு சரியான தீர்வு காணாமல் மேலும் மேலும் மக்கள் மீதே வரிச்சுமையை செலுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!