India
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் அக்கா; தப்பிய மாமா: சிக்கிய கார் டிரைவர்.. அரண்டுப்போன பெங்களூரு போலிஸ்!
பெங்களூருவின் காமாக்ஷிபாள்யா பகுதியில் உள்ள காவேரிப்புராவில் வசித்து வந்தவர் 37 வயதான அசோக். இவர் ஓலா நிறுவனத்தில் கேப் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வனஜக்ஷி (31).
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, இந்த தம்பதியின் 3 குழந்தைகளும் தும்குரு மாவட்டத்தில் உள்ள அசோக்கின் பெற்றோர் வீட்டில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை வருவது வழக்கம். இப்படியாக சம்பவம் நடந்த அன்றும் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது கடந்த ஏப்ரல் 17ம் தேதி இரவு பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அசோக், மனைவி வனஜக்ஷி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது யார் என அசோக் கேட்க அதற்கு முறையாக பதிலளிக்க வனஜக்ஷியும் மறுத்தியிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அசோக், வனஜக்ஷியிடம் சண்டையிட்டிருக்கிறார். வாக்குவாதம் கைகலப்பாக மாறியிருக்கிறது. இதில் உச்சகட்ட கோபத்துக்கு சென்ற அசோக், மனைவியை சரமாரியாக தாக்கி அவரை கொலையும் செய்திருக்கிறார்.
உடனடியாக வீட்டை பூட்டிவிட்டு அசோக் தப்பிச் சென்றிருக்கிறார். இந்த நிலையில் மறுநாளாக ஏப்ரல் 18 அன்று வனஜக்ஷியின் சகோதரர் ஷிவசுவாமி அசோக்கின் வீட்டுக்கு வந்தபோது வீடு பூட்டியிருந்திருக்கிறது.
ஆனால் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த ஷிவசுவாமி அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவரது சகோதரி அழுகிய நிலையில் சடலமாக கிடந்திருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக போலிஸுக்கு தகவல் கொடுத்ததோடு அசோக் மீதுதான் சந்தேகப்படுவதாகச் சொல்லி புகாரும் கொடுத்திருக்கிறது. இதனையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலிஸார், மகடி சாலையில் உள்ள நண்பர் வீட்டுக்கு தப்பிச் செல்ல இருந்த அசோக்கையும் மடக்கி பிடித்து கைது செய்திருக்கிறார்கள்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேற்குறிப்பிட்ட சம்பவத்தை கூறி வனஜக்ஷியை கொன்றது தான் என வாக்குமூலமும் அளித்திருக்கிறார் அசோக். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த சம்பவம் காவேரிப்புரா பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!