India
தேஜஸ்வி வீட்டு இப்தார் விருந்தில் கலந்து கொண்ட நிதிஷ்குமார்: கூட்டணியில் விரிசல்.. கலங்கும் பாஜக மேலிடம்!
பீகாரில் 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் நிதிஷ்குமாரை தோர்க்கடிக்க காங்கிரஸ், ஜனதா தளம் (JD), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்க்கொண்டன. இருப்பினும், பா.ஜ.கவுடன், ஐக்கிய ஜனதா தளம் (JDU) கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானர் நிதிஷ்குமார்.
இதையடுத்து 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பா.ஜ.கவுடன் கைதுகோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தார் நிதிஷ்குமார். இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்சனை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி கட்சிகள் தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்டனர். இதனால் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி எளிதில் வெற்றி பெற்றது. ஆனால், தேஜஸ்வி தலைமையிலான ஆர்.ஜே.டி கட்சி கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் 75 இடங்களில் வெற்றி பெற்றது. நிதிஷ்குமாரால் 43 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. மேலும் பா.ஜ.கவும் 74 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், பா.ஜ.கவில் இருந்துதான் முதல்வராக ஒருவரை நியமிக்க வேண்டும் என அதன் கட்சி தலைவர்கள் நிதிஷ்குமாருக்கு அழுத்தம் கொடுத்தனர். பிறகு கூட்டணி தர்மத்திற்காக மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒத்துக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பெற்றுக் கொண்டது.இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஆர்.ஜே.டி கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
சமீபகாலமபாக நிதிஷ்குமார் அரசு மீது பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் பகிரங்க ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். அண்மையில் கூட பீகார் வந்த ஒன்றிய அமைச்சர், பீகார் மாநிலத்தில் மது விலக்கு இருந்தாலும் மது விற்பனை அமோகமாக நடைபெறுகிறது என கூறியதி நிதிஷ்குமாரி வெறுப்படைய செய்துள்ளது.
மேலும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்ததில் ஆர்.ஜே.டி கட்சிக்கு குறைவான தொகுதியே ஒதுக்க வேண்டும் என இப்போதில் இருந்தே பா.ஜ.க பேசத் துவங்கிவிட்டது. அதேபோல் அடுத்த நடைபெற உள்ள சட்டமன்ற தேர்ததில் ஆர்.ஜே.டியை கூட்டணியில் இருந்து வெளியேற்றி தனியாக நிற்கவும் பா.ஜ.க முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இப்படி முதல்வராக இருந்தாலும் பா.ஜ.கவின் சொல்லுக்கு கட்டுப்பட்டவராகவே இருந்து வருகிறார் நிதிஷ்குமார்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி ஏற்பாடு செய்திருந்த இப்தார் விருந்தில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டுள்ளது பீகார் அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.இந்த விருந்தில் கலந்து கொண்டதன் மூலம் பா.ஜ.கவுக்கு நிதிஷ்குமார் மறைமுகமாக ஒரு செய்தியை கூறியதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இது, பா.ஜ.க தனியாக செல்ல வேண்டும் அல்லது தன்னுடைய சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதை இந்த விருந்தில் கலந்து கொள்வதன் மூலம் பா.ஜ.கவிற்கு மறைமுகமாக சொல்லியுள்ளார். மேலும், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.கவிக்கு எதிராக நிதிஷ்குமார், தேஜஸ்வி கட்சிகள் இணைய வாய்பாக இந்த இப்தார் விருந்து அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!