India
கிச்சடில இவ்வளவு உப்பா? மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்.. உண்மையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பதக் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் காக் (46). இவரது மனைவி நிர்மலா (40).
கணவன் மனைவி இருவரும் ஒன்றாகவே வசித்து வருகிறார்கள். இருவருக்குள்ளும் அவ்வப்போது வாக்குவாதமும் சண்டையும் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று (ஏப்.,15) காலை உணவாக நிலேஷுக்கு நிர்மலா கிச்சடி செய்து கொடுத்திருக்கிறார்.
அதில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த நிலேஷ் நிர்மலாவிடம் வழக்கம் போல சண்டையிட்டிருக்கிறார். வாக்குவாதம் கைகலப்பாக முற்றியிருக்கிறது.
இதன் காரணமாக நீளமான துண்டை எடுத்து நிர்மலாவின் கழுத்தை சுற்றி நெரித்திருக்கிறார். இதனால் நிலைதடுமாறி விழுந்த நிர்மலா அப்போதே இறந்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற நிலேஷ் மீது 302 சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகாராஷ்டிரா போலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!