இந்தியா

காலை உணவோடு தேநீர் கொடுக்காததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்; தானேவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தேநீர் கொடுக்காததால் மருமகளை சுட்ட மாமனாரை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

காலை உணவோடு தேநீர் கொடுக்காததால் மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்; தானேவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் குடும்பங்களில் நடைபெறும் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. பெண்கள் வதை, சிறார் கொடுமை போன்ற நிகழ்வுகள் அன்றாடம் நடந்துக்கொண்டே இருக்கின்றன.

அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தை அடுத்த ரபோடி என்ற பகுதியில் மாமனாரால் மருமகளுக்கு நேர்ந்த அவலம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ரபோடியைச் சேர்ந்த காசிநாத் பாண்டுரங் பாட்டீல் என்ற 76 வயது முதியவரின் தனக்கு கொடுக்கப்பட்ட காலை உணவுடன் தேநீர் கொடுக்கவில்லை எனக் கூறி 42 வயதான மருமகள் ஒருவரை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்.

இதனால் வயிற்றில் குண்டடிப்பட்ட அந்த பெண்ணை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கிறார்கள். இதனையடுத்து காசிநாத் மீது அவரது மற்றொரு மருமகள் போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.

இதனையடுத்து காசிநாத் மீது 307, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் போலிஸார் வழக்குப்பதிவு செய்து, மருமகளை துப்பாக்கியால் சுட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories