India
கடித்து குதறிய தெரு நாய்கள்.. 11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம் : ராஜஸ்தானில் நடந்த கொடூரம் !
ராஜஸ்தான் மாநிலம் டோங்கின் நிவாய் பகுதியைச் சேர்ந்தவர் அனிஷா. 11 வயது சிறுமியான இவர் சம்பவத்தன்று காலை இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். பிறகு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சிலர் காட்டுப்பகுதிக்கு சென்று அவரை தேடிப்பார்த்தனர்.
அப்போது, ஒரு இடத்தில் 7 தெருநாய்கள் கூட்டமாக சிறுமி அனுஷாவை கடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு கற்களை வீசி நாய்களை விரட்டியடித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் தெருநாய்களை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!
-
#Delimitation இந்தியாவின் தென் முனையில் இருந்து உரிமைக் குரல் எழுப்புவோம் : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
-
தொகுதி மறுவரையறை : தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை!