India
ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த 5 மாணவர்கள்!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த 5 மாணவர்கள் மாணவியை தங்களின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தி வந்துள்ளனர்.
ஆனால், மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அந்த மாணவர்கள், அவரை விடாமல் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தனது பெற்றோருக்கு அந்த மாணவி செல்போனில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாணவி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக மாணவிக்கு விஷம் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிற்கு வீட்டிற்கு வந்தவுடனே மாணவி மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அப்படையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து, மாணவியின் உடற்கூறு ஆய்வின் முடிவுக்கு காத்திருக்கின்றனர். மேலும் அந்த 5 மாணவர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!