India

பாலத்தை இரவோடு இரவாக ஆட்டையப்போட்ட கொள்ளைக் கூட்டம்.. மக்கள் கண்முன்னே நடந்த திருட்டு!

நாம் வங்கி, வீடு, ஏ.டி.எம் உள்ளிட்ட இடங்களில் திருட்டு சம்பவங்களை கேள்வி பட்டிருப்போம். ஏன் கிணற்றைக் காணோம் என்ற கதையையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இதை எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு பீகாரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம், நஸ்ரிகஞ்ச் பகுதியில் 60 அடிக்கு இரும்பு பாலம் ஒன்று இருந்தது. இந்தப் பாலம் 1972ம் ஆண்டு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்துள்ளது. இதனால் இந்தப் பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர். மேலும் இதன் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாழடைந்த இரும்பு பாலத்தை அரசு அதிகாரிகள் என கூறிக் கொண்டு சிலர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்துக் கொண்டிருந்தனர். மேலும் பாலத்தை அகற்றுவதற்கு கிராம மக்களும் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர்.

பின்னர் மூன்று நாட்களில் பாலத்தை முழுமையாக இடித்துவிட்டு இரும்பு துண்டுகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றுள்ளது. பிறகுதான் தெரிந்தது அந்தப் பாலத்தை இடித்து அதன் இரும்புத் துண்டுகளை எடுத்துச் சென்றவர்கள் அரசு அதிகாரிகள் அல்ல கொள்ளையர்கள் என்பது.

தங்கள் கண்முன்னே நடந்த பயங்கர திருட்டால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு பாலத்தின் இரும்புகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை தேடிவருகின்றனர்.

Also Read: ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு 2 சிறார்களை கொன்ற இளைஞன் சரமாரியாக வெட்டிக்கொலை: புதுச்சேரி அருகே நடந்த பகீர்