India
சிறுவனை தும்பிக்கையால் தூக்கிச் சுற்றிய யானை.. போராடி மீட்ட தந்தை - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
கேரளாவில் யானைக்கு உணவு கொடுக்கச் சென்ற சிறுவனை தும்பிக்கையால் யானை தூக்கிய நிலையில், சிறுவனின் தந்தை போராடி மீட்டுள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரம், கீழபறம்பு பகுதியைச் சேர்ந்த நாசர் என்பவருக்கு சொந்தமான யானைக்கு உணவு கொடுக்க 4 வயதுள்ள ஒரு சிறுவனும், அச்சிறுவனின் தந்தையும் யானையின் அருகில் சென்றுள்ளனர்.
சிறுவன் உணவு கொடுக்க முயன்ற நேரத்தில் திடீரென மிரண்ட யானை அந்த ச்சிறுவனை தும்பிக்கையில் தூக்கி சுற்றி வளைத்துள்ளது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை யானையுடன் போராடி தனது சிறுவனை பெரிய போராட்டத்திற்கு பின் காப்பாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்றாலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போதுதான் வெளியாகியுள்ளன.
4 வயது தனது குழந்தையை காப்பாற்ற தந்தை நடத்திய போராட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
Also Read
-
ED-க்கு ரூ.2 லட்சம் அபராதம் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
”எங்கள் பேரணியை பார்த்து பா.ஜ.க பயத்தில் உள்ளது” : RJD தலைவர் தேஜஸ்வி பேட்டி!
-
“தமிழ்நாடு மக்களின் அன்போடு புறப்பட்டுச் செல்கிறேன்!” : பயணத்தின் தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 1.85 கோடி மெட்ரிக் டன் நெல் கொள்முதல் : அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்!
-
ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! : ஒரு வார கால அரசுமுறைப் பயணம்!