India
மனைவியை கிண்டல் செய்த கும்பல்.. தட்டிக் கேட்ட கணவன் குத்தி கொலை : குஜராத்தில் பகீர் சம்பவம்!
குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்தவர் ஷபீர் லால்பரியா. இவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில் ஷபீர் லால்பரியா தனது மனைவியுடன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது மோஹ்சின் என்பவர் அவரது மனைவியை கிண்டல் செய்துள்ளார். இதனால் ஷபீர் மற்றும் மோஹ்சின்னிற்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுத்தி நிறுத்தி விலக்கி விட்டுள்ளனர். பிறகு இரு வீட்டாரும் பஞ்சாயத்து பேசியுள்ளனர்.
அப்போது மோஹ்சின் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷபீர் மீது பலமுறை குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்ப்பாராத உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு ரத்த வெள்ளத்தில் இருந்த ஷபீரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து மோஹ்சின் உட்பட 4 பேரை கைது செய்தனர்.
Also Read
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!