India
“75 வருசமா ஒலிபெருக்கிகளால் எந்தப் பிரச்னையும் இல்லை.. இப்போ மட்டும் எப்படி?” : கர்நாடக முன்னாள் முதல்வர்
தொடர்ந்து மதரீதியான பிரச்சினைகளை எழுப்பி பிரிவினை செய்தால், இந்தியாவுக்கும் இலங்கையின் நிலைதான் ஏற்படும் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வரை தடை விதித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதை தொடர்ந்து ஹலால் உணவுகளை இந்துக்கள் தவிர்க்க வேண்டும் என இந்துத்வா அமைப்பினர் பேசி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி வைத்து "பாங்கு" ஓதுவதற்கு இந்துத்வா அமைப்பினர் எதிர்ப்பு கிளப்ப ஆரம்பித்துள்ளனர். இது மதக் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, “ஹிஜாப், ஹலால் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்தால், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைதான் இந்தியாவிற்கு ஏற்படும்.
இந்துக்கள், இஸ்லாமியர்கள் இடையே நல்லிணக்கம் இல்லாவிட்டால் அமைதி போய்விடும் என்பதோடு வளர்ச்சி குன்றிவிடும்.
75 ஆண்டுகளாக மசூதிகளின் ஒலிபெருக்கிகளால் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போது மட்டும் எப்படி பிரச்சினை வருகிறது?
மக்களைக் காக்கவே பா.ஜ.கவுக்கு எதிராக நிற்கிறேன். மாறாக, யாரையும் மகிழ்விப்பதற்காக அல்ல. பா.ஜ.கவும் வலதுசாரி அமைப்புகளும் சமூகத்தை சீரழித்து வருகின்றன. தெருக்களுக்குத் தீ வைக்கிறார்கள்.” எனச் சாடியுள்ளார்.
Also Read
-
மோடி - அமித்ஷாவின் பிளாக்மெயில் மசோதா : எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கும் ஒன்றிய அரசு!
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !