India
புகைப்பிடித்த சிறுவன் அடித்துக் கொலை.. உடலை ரோட்டில் வீசிய கொடூரம் : டெல்லியில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !
டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு சிறுவன் அங்கு புகைப்பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
இதனால் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை மாறி ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் ஆவேசத்தின் உச்சத்திற்குச் சென்ற சிறுவன், புகைபிடித்துக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
பின்னர், யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை ஒரு பையில் போட்டு சாலையோரம் தூக்கி வீசியுள்ளார். இது குறித்து அறிந்த போலிஸார் சிறுவன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து போலிஸார் கொலை செய்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகைப்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !