India
மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; தப்பியோடிய கணவனுக்கு காப்பு மாட்டிய புதுவை போலிஸ்!
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கணேசனின் மனைவி அழகுமீனா. அண்ணா சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் அழகுமீனா, வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பியூட்டி பார்லருக்கு வந்த கணேசன், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணேசன், தன்னோடு எடுத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அழகுமீனா மீது ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதில் முகம், நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மீனா அலறினார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார். பின்பு மற்ற ஊழியர்கள் அழகுமீனாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய கணேசனை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!