India
‘இனி உன் அப்பா வீட்டுக்கு வரமாட்டாரு..’ : காதலியின் தந்தையை பார்ட்டிக்கு அழைத்து கொலை செய்த இளைஞர் !
மும்பை உல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் ஷா (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், பப்பு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள காதலியின் தந்தை கமல்ஜீத் என்பவரை சந்தித்து பெண் கேட்டுள்ளார். ஆனால், கமல்ஜீத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பப்பு சில நாட்களுக்கு பிறகு மீண்டும், கமல்ஜீத்தை பார்ட்டி ஒன்றுக்கு அழைத்துள்ளார். அதன்படி பப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த சிறப்பு பார்ட்டிக்கு கமல்ஜீத் கலந்துக்கொள்ள வந்துள்ளார்.
அப்போது, அவருக்கு குடிக்க மதுபானம் கொடுத்துள்ளார். அடுத்த சிறுது நேரத்திலேயே அங்கிருந்தவர் பப்புவின் நண்பர்கள் குடிபோதையில் மயங்கிய நிலையில் இருந்தபோது, போதையில் இருந்த காதலியின் தந்தையை தனியாக அழைத்துச் சென்று, ‘உன்னோட மகளை திருமணம் செய்துகொள்ள தடையா நீதான் இருக்க.. இனி நீ வேண்டாம்’ என்று கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கமல்ஜீத்தின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் பப்பு.
பின்னர் காதலிக்கு போன் செய்த பப்பு, 'இனி உன் அப்பா வீட்டுக்கு வரமாட்டாரு.. அவரை நான் கொன்றுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலி, உடனே அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பப்புவை கைது செய்து, கமல்ஜீத் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சமூகம் மேம்பட, சங்கிகள் கதற பெரியாரியம் உலகமயம் ஆகட்டும்!” - முரசொலி தலையங்கம்!
-
வரலாற்றில் இதுவரையில் இல்லாதது... ஒரே நாளில் அரசுக்கு குவிந்த ரூ.274.41 கோடி வருவாய் : பின்னணி என்ன?
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!