India

₹5 லட்சம் கோடி ஊழல்.. சௌகரிய வசதிக்கு அனுமதி கேட்ட சித்ரா- குட்டு வைத்த நீதிபதி: கோர்ட்டில் நடந்தது என்ன?

தேசிய பங்கு சந்தை (NSE) நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் NSE நிர்வாக இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில், குறிப்பாக, 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

இதனையடுத்து பல்வேறு புகார்கள் குவியத் தொடங்கிதையடுத்து, பங்கு பரிவர்த்தனை வாரியமான ‘செபி’ இதுதொடர்பான புகாரை எடுத்துக்கொண்டு, விசாரணைக்கு இறங்கியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக, பங்குச் சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அடையாளம் தெரியாத மர்ம சாமியாரின் ஆலோசனையை கேட்டு சித்ரா ராமகிருஷ்ணா எடுத்துள்ளதாக அந்த விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இமயமலையில் இருப்பதாகக் கூறப்படும் மர்ம சாமியார், ரிக், யஜூர், சாம என வேதங்களின் பெயர்களில் உருவாக்கியுள்ள இ-மெயில் ஐடிக்கு பங்குச் சந்தை தொடர்பாக முக்கிய தகவலை அனுப்பி உள்ளதையும், அதே மெயில் ஐடி-யிலிருந்து ஆலோசனை கிடைத்தபின் அதன்படி முடிவுகள் எடுத்து வந்துள்ளதாகவும் செபி கண்டுபிடித்தது.

அதுமட்டுமல்லாது, மர்ம சாமியாரின் வழிகாட்டுதல் படி 2013-ஆம் ஆண்டின் NSE ஆலோசகராக நியமிக்கப்பட்டு, ஆனந்த் சுப்பிரமணியனுக்கு அடுத்தடுத்து 3 சம்பள உயர்வு அளித்து 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாகவும் செபி தெரிவித்துள்ளது.

மேலும், சித்ரா மற்றும் ஆனந்த் இருவரும் இணைந்து பணம் சம்பாதிக்கும் நோக்கில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து தேசிய பங்குச் பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ கடந்த வாரம் கைது செய்து விசாரித்து வருகிறது.

இதனையடுத்து இதுதொடர்பாக புகார் மீது தற்போது வரை நடந்த முதற்கட்ட விசாரணையில், சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.2 கோடியும் அபராதம் விதித்து, இனி வரும் மூன்று ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்து நேற்றைய தினம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. அப்போது ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்ததை ரத்து செய்த நீதிமன்றம் அவருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது.

மேலும் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு வீட்டு உணவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் நிகராகத்து, பகவத் கீதை, அனுமன் சாலிசா மற்றும் வழிபாட்டு புத்தகங்களை எடுத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Also Read: ஆனந்த் சுப்பிரமணியனை கைது செய்தது CBI... சாமியார் கண்ணசைவில் கோடிக்கணக்கில் சுருட்டிய இவர் யார்?