India

கைது செய்யப்பட்ட Paytm நிறுவனர்.. உடனே ஜாமினில் விடுவிப்பு: காரணம் என்ன?

Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை ஓட்டிச் சென்றபோது மதர்ஸ் இன்டர்நேஷ்னல் பள்ளிக்கு வெளியே நின்றிருந்த காவல்துறை ஆணையரின் வாகனத்தின் மீது மோதியுள்ளார்.

பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது போலிஸாரின் வாகனத்திலிருந்து ஓட்டுநர் தீபக் குமார் இது குறித்து காவல்துறை ஆணையருக்குத் தகவல் தொடுத்துள்ளார்.

இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகன எண்ணை கொண்டு விசாரணை செய்தபோது அந்த வாகனம் Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

பிறகு கவனக்குறைவாகக் காரை ஓட்டிய வழக்கில் அவரை போலிஸார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சாலையில் நடந்துச் சென்ற பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல்.. பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் நடந்த அவலம்! (Video)