India

இன்ஸ்டாவில் பழகி பள்ளி சிறுமிகளை கடத்தி பாலியல் தொந்தரவு; கேரள போலிஸ் வலையில் சிக்கிய டெலிவரி பாய்ஸ்!

கேரளாவின் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த இரண்டு சிறுமிகளை மார்ச் 5ம் தேதி முதல் காணாமல் போயிருக்கிறார்கள்.

இது தொடர்பாக பத்தனம்திட்டா போலிஸிடம் பள்ளி நிர்வாகத்தினர் புகாரளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதன்படி, சிறுமிகள் கடைசியாக சென்று வந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் காணாமல் போன அந்த மாணவிகள் இருவரையும் காரில் ஏற்றி கடத்திச் செல்லும் நிகழ்வு பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனையடுத்து பத்தனம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படையினர் மாணவிகளை கடத்தியவர்களை கார் எண்ணை ஆதாரமாகக் கொண்டு தேடி வந்தனர்.

Also Read: காதலன் கண்முன்னே காதலியை பாலியல் வன்கொடுமை செய்த கயவர்கள்.. கம்பி எண்ணவைத்த போலிஸ் - நடந்தது என்ன?

அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பள்ளி மாணவிகளை கடத்தியது பத்னபுரத்தைச் சேர்ந்த அஃப்சல் முகமது (22) மற்றும் ஆகாஷ் உதயன் (18) ஆகிய இருவர் என தெரியவந்தது.

மாணவிகளை கடத்திய அவர்கள் இருவரையும் கொன்னி காவல்நிலைய போலிஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருவரும் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலையில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும், கடத்தப்பட்ட பள்ளி மாணவிகளிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தவர்கள் என்றும் தெரிய வந்தது.

அந்த வகையில் கடந்த மார்ச் 5ம் தேதி காரில் ஏற்றி கடத்த அந்த சிறுமிகளை அஃப்சலும், ஆகாஷும் சேர்ந்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Also Read: தையல் பள்ளி பேரில் பாலியல் தொழில்; 16 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கயவர்கள்: 6 பேர் சிக்கியது எப்படி?